Home நாடு சபா நிலநடுக்கம்: வெளிநாட்டுப் பயணி மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் கடும் விமர்சனம்!

சபா நிலநடுக்கம்: வெளிநாட்டுப் பயணி மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் கடும் விமர்சனம்!

484
0
SHARE
Ad

sabah_naked_2_0206_620_348_100கோலாலம்பூர், ஜூன் 8 – கோத்தா கினபாலு மலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குக் காரணம் சில நாட்களுக்கு முன்னர் அங்கு வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நிர்வாணமாகப் படம் எடுத்தது தான் எனச் சபாவாசிகள் பலரால் கூறப்பட்டு வரும் நிலையில், கனடாவைச் சேர்ந்த அந்தப் பயணிகளில் ஒருவர் அதைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேஸ்புக், டிவிட்டரில் விமர்சித்துள்ள எமில் காமின்ஸ்கி என்ற அந்த நபர், “அவர்கள் கூறுவது ஏற்றுக்கொள்வது போல் இல்லை. மூடநம்பிக்கைகளைப் பற்றி நான் கவலைப்படுவதாக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், காமின்ஸ்கி மோன்கீடைம் என்ற டிவிட்டர் பக்கத்தில், சபா சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டத்தோ மசிடி மஞ்சுவான் ஒரு “முட்டாள்” மற்றும் “சுற்றுலாத்துறையின் அமைச்சர் இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“ஓ மலேசியா, ஏன் உங்கள் அரசியவாதிகளெல்லாம் இப்படி முட்டாள்களாக உள்ளனர்” என்றும் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாக ‘தி ஸ்டார்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், அப்படி உண்மையில் நிர்வாணப் புகைப்படங்கள் தான் நிலநடுக்கத்திற்குக் காரணம் என்றால், தான் சென்ற நேபாளம், தாய்லாந்து, இந்தியா, சைனா, தாய்வான், ஹாங்காங் மற்றும் இன்னும் பல நாடுகளில் ஏற்படும் நிலநடுக்கத்திற்கெல்லாம் நான் தான் பொறுப்பாகியிருக்க வேண்டும் என்று கூறி, பல்வேறு நாடுகளில் தான் எடுத்த நிர்வாணப் படங்களையும் பதிவு செய்துள்ளார்.