Home Featured நாடு சபா பிரதேசங்களில் நிலநடுக்கம்!

சபா பிரதேசங்களில் நிலநடுக்கம்!

739
0
SHARE
Ad

Sabah_map

கோத்தாகினபாலு – இன்று காலை 9.39 மணியளவில் ரிக்டர் அளவில் 4.0 புள்ளிகள் கொண்ட நிலநடுக்கம் சபாவின் ரானாவ் பகுதியைத் தாக்கியதைத் தொடர்ந்து கோத்தாகினபாலு உள்ளிட்ட பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

துவாரான், பெனாம்பாங், ரானாவ் ஆகிய பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

நிலநடுக்கம், ரானாவ்விலிருந்து வடமேற்காக 16 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையட்டுத் தொடங்கியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சில பகுதிகளில் மின்சாரக் கம்பிகள் வலுவுடன் அசைந்ததாகப் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கினபாலு மலைப் பகுதியில் உடனடியாக அவசர வெளியேற்ற நடவடிக்கைகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி இதே ரானாவ் பகுதியை 6.0 புள்ளிகள் வலுவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியது. இந்த நிலநடுக்கத்தில் கினபாலு மலையேறிக் கொண்டிருந்தவர்களில் 18 பேர் இறந்தனர்.