சிங்கப்பூர் – ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் உலகின் முதல் வாடகைக் கார் (Self – driving Taxis), நேற்று வியாழக்கிழமை சிங்கப்பூரில் சோதனை ஓட்டத்தில் இயக்கப்பட்டது.
‘ரோபோ டாக்சி’ என அழைக்கப்படும் இந்த வகைக் கார்களைத் தயாரிக்கும் நிறுவனமான நுடோனோமி, குழு ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தங்களது செயலியைப் பதிவிறக்கம் செய்ய வைத்து, சிங்கப்பூரின் முக்கிய வீதிகளில் நேற்று சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டது.
மிட்சுபிஷி ஐ -எம்ஐஈவி மின்சார வாகத்தைக் கொண்டு நடத்தப்பட்ட இச்சோதனை ஓட்டத்தின் போது, ஓட்டுநர் இன்றி, எஞ்சினியர் ஒருவர் மட்டும், வாகனத்தில் அமர்ந்து செயல்படும் விதங்களை ஆராய்ந்துள்ளார்.
வரும் 2018-ம் ஆண்டு முதல் இந்த வகை வாடகைக் கார்கள் செயல்படத் தொடங்கும் என்றும் நுடோனோமி அறிவித்துள்ளது.