Home Featured நாடு புதிய பொறுப்புகள் குறித்து அமைச்சரைச் சந்தித்து விளக்கம் பெற்றார் தேவமணி

புதிய பொறுப்புகள் குறித்து அமைச்சரைச் சந்தித்து விளக்கம் பெற்றார் தேவமணி

913
0
SHARE
Ad

devamany-james ongkili-

புத்ரா ஜெயா – புதன்கிழமை (ஆகஸ்ட் 24) முதல் ஆற்றல், பசுமைத் தொழில்நுட்பம், நீர் துறை அமைச்சுக்கான இரண்டாவது துணையமைச்சராக புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ள டத்தோஸ்ரீ செனட்டர் எஸ்.கே.தேவமணி, தனது பொறுப்புகள் மற்றும் பணிகள் குறித்து ஆற்றல், பசுமைத் தொழில்நுட்பம், நீர் துறை அமைச்சர் டாக்டர் ஜேம்ஸ் ஒங்கிலியைச் சந்தித்து விளக்கங்கள் பெற்றார்.

அந்த சந்திப்பின்போது அமைச்சின் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜைனி உஜாங் உடனிருந்தார்.

#TamilSchoolmychoice

தேவமணியுடனான தனது சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள டாக்டர் ஜேம்ஸ் ஓங்கிலி, புதிய இரண்டாவது துணையமைச்சரை வரவேற்பதாகவும், தேவமணி இனி அமைச்சின் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறு நகர்கள், பூர்வீகக் குடிமக்களுக்கான கிராமங்கள் ஆகியவற்றுக்கான மின்சார இணைப்புகள் போன்ற பணிகளில் கவனம் செலுத்துவார் என்றும் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், பிரதமர் துறையின் துணையமைச்சராக, பொருளாதாரத் திட்டமிடல் பிரிவுக்கான பொறுப்புகளையும் தேவமணி வகித்து வருவார்.

(படவிளக்கம்: அமைச்சர் ஜேம்ஸ் ஓங்கிலியுடன் தேவமணி. அருகில் அமைச்சின் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜைனி உஜாங்)