ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற சமயம், லீ சோங் வெய்யின் புகைப்படத்துடன் தனது புகைப்படத்தையும் இணைத்து நட்பு ஊடகங்களில் வெளியிட்ட இகா சியாஸ்வானி, தன்னைப் போலவே உருவம் கொண்ட லீ சோங் வெய்யுடன் ஒருநாள், பூப்பந்து விளையாட வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தினார்.
அது பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் வைரலாகப் பரவியது.
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை எக்ஸ்ஓஎக்ஸ் என்ற செல்போன் நிறுவனம், லீ சோங் வெய்யின் ஒலிம்பிக் சாதனையைப் பாராட்டி அவருக்கு 110,000 ரிங்கிட் ரொக்கத் தொகை வழங்கியது. அதனைப் பெறுவதற்காக வந்த அவரிடம், இது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த லீ சோங் வெய், “முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
“எனக்கு நேரம் கிடைக்கும் போது, அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறேன்” என்று லீ சோங் வெய் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.