Home Featured நாடு மலேசியா – சிங்கப்பூர் நட்புறவுக்கு சிறந்த ஆலோசகராக இருந்தவர் நாதன் – நஜிப் இரங்கல்!

மலேசியா – சிங்கப்பூர் நட்புறவுக்கு சிறந்த ஆலோசகராக இருந்தவர் நாதன் – நஜிப் இரங்கல்!

674
0
SHARE
Ad

Najib

கோலாலம்பூர் – மறைந்த முன்னாள் சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு, கோலாலம்பூரிலுள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் இன்று வெள்ளிக்கிழமை, மலேசியப் பிரதமர் டத்தோ நஜிப் துன் ரசாக் அஞ்சலி செலுத்தியதோடு, அனுதாபச் செய்தி புத்தகத்திலும் கையெழுத்திட்டார்.

பக்கவாதம் காரணமாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் 3 வாரங்களாகச் சிகிச்சை பெற்று வந்த எஸ்.ஆர்.நாதன், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி, சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவருக்கு வயது 92.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கடந்த 1988 முதல் 1990 வரையில், மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதராக நாதன் செயல்பட்டதோடு, மலேசியா, சிங்கப்பூருக்கு இடையிலான நெருக்கமான நட்புறவிற்குக் காரணமாக இருந்தார் எனது பிரதமர் நஜிப் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் தலைமையில், இளைஞர் மற்று விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுதின், பிரதமர் துறை அமைச்சர் ஜோசப் குருப் ஆகியோர் சிங்கப்பூரில் இன்று நடைபெற்ற எஸ்.ஆர்.நாதனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.