கோத்தா கினபாலு – இன்று வியாழக்கிழமை இரவு 9.00 மணியளவில் 5.2 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சபா மாநிலத்தின் ரானாவ் பகுதியைத் தாக்கியது.
அதைத் தொடர்ந்து கினபாலு மலை மீது இருந்த சுமார் 100 மலையேறிகள் அங்கு பாதுகாப்பான இடத்திற்கு விரைந்தனர் என்றும் எனினும் இதுவரையில் எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கம் சில வினாடிகளுக்கு நீடித்ததாகவும், அது சக்தி வாய்ந்ததாக இருந்ததாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.
நில நடுக்கத்தின் அதிர்வுகள் கினபாலு மலையின் மேற்கு மலைச் சரிவில் உணரப்பட்டன. கோத்தா பெலுட், பெனாம்பாங், பாப்பார் போன்ற பல பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன.
3 ஆண்டுகளுக்கு முன்னர் சபாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கினபாலு மலையில் இருந்த 18 மலையேறிகளும், பயண வழிகாட்டிகளும் மரணமடைந்தனர்.