Home இந்தியா மும்பை அடுக்குமாடி தீ விபத்திலிருந்து 25 பேரை காப்பாற்றிய பீட்சா பணியாளர்!

மும்பை அடுக்குமாடி தீ விபத்திலிருந்து 25 பேரை காப்பாற்றிய பீட்சா பணியாளர்!

571
0
SHARE
Ad

mumbai,மும்பை, ஜூன் 8 – மும்பையில் நேற்று முன்தினம் 24 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேரை பீட்சா (டெலிவரி செய்யும்) பணியாளர் காப்பாற்றியுள்ளார்.

மும்பை சண்டிவலி என்ற பகுதியில் 24 மாடி குடியிருப்பின் 14-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீவிபத்து நடந்த குடியிருப்புக்கு அருகில் பீட்சாவை வழங்க, பணியாளர் ஜிதேஷ்(21) சென்றிருந்தார்.

mumbaiஅப்போது, மக்கள் உதவி கேட்டு அலறும் சத்தத்தை கேட்டதும் தன்னுடன் இருந்த மற்ற இரு நண்பர்கள் மற்றும் ஒரு காவலருடன் சேர்ந்து, விபத்து ஏற்பட்ட 14-வது மாடிக்கு விரைந்து சென்றனர்.

#TamilSchoolmychoice

14-வது மாடியில் இருந்து மக்களை காப்பற்றி 22-வது மாடிக்கு கொண்டு சென்றனர். இதுபோல் 8 முறை 14மாடியில் இருந்து 22 மாடிக்கு மக்களை காப்பாற்றி கொண்டு சென்றுள்ளனர்.

Mumbai High-Rise Fireபின்னர் அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார். அந்த பீட்சா பணியாளர் மும்பை ‘ஈகிள் பாய்ஸ் பீட்சா’ என்ற நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.