Home நாடு பக்காத்தான் கூட்டணியில் சமரசம் – வான் அசிசா நம்பிக்கை

பக்காத்தான் கூட்டணியில் சமரசம் – வான் அசிசா நம்பிக்கை

480
0
SHARE
Ad

pakatan_3utama

கோலாலம்பூர், ஜூன் 8 – பக்காத்தானில் கூட்டணிக்கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளைச் சரி செய்ய பிகேஆர் கட்சி கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இது குறித்துப்  பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜசெக, பாஸ் இடையிலான உறவு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது குறித்து கலந்தாய்வு செய்வோம். தேசிய முன்னணிக்கு மாற்றுக்கட்சியாகப் பக்காத்தானைத் தான் மக்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றார்கள். இந்த வேளையில் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றவேண்டிய தார்மீகப் பொறுப்பு நமக்கு உள்ளது. பாஸ் ஜசெகவுடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ள கோரிக்கை மறுபரிசீலனை செய்யப்படும்” இவ்வாறு வான் அசிசா குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த பாஸ் கட்சியின் மாநாட்டில் ஜசெகவுடன் உறவுகளை முறித்துக் கொள்கின்றோம் எனப் பாஸ் உலாமாக்கள் மன்றம் முடிவெடுத்து அதனைப் பாஸ் பொதுப் பேரவையும் எந்தவித விவாதமும் இன்றி ஏற்றுக் கொண்டது.

அது குறித்துக் கருத்துக் கூறிய லிம் கிட் சியாங், பக்காத்தான் தனது பாதையில்  இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. எதிர்க்கட்சிகளின் இறுதிச்சடங்குகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன என்று ஜசெக கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.