Home உலகம் யூ-டியூப் காணொளி எதிரொலி:கறுப்பினப் பெண்ணைத் தாக்கிய காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம்

யூ-டியூப் காணொளி எதிரொலி:கறுப்பினப் பெண்ணைத் தாக்கிய காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம்

408
0
SHARE
Ad

அமெரிக்கா, ஜூன்8- கடந்த வெள்ளிக்கிழமை அன்று, டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள மெக்கின்னி  நகரக் காவல்துறையினருக்குக் கிரைக் ராஞ்ச் என்ற இடத்திற்கு அருகே சிலர் பொதுமக்களைத் தொந்தரவு  செய்வதாகப் புகார் வந்துள்ளது.

உடனடியாகச் சம்பவ இடத்திற்குக் காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர்.அங்கு சென்றதும் காவல்துறை அதிகாரிகளில் ஒருவர், அங்கு நீச்சல் உடையில் இருந்த கறுப்பினப் பெண்ணை என்ன ஏதென்று கூட சரியாய் விசாரிக்காமல் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார்.

இதைத் தடுக்க வந்த வாலிபர்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

சாதாரணமாகக்  கையாண்டிருக்க வேண்டிய ஒரு விசயத்தை அவர் தனது ஆர்வக் கோளாறால் பெரிய பிரச்சனையாக்கித் தேவையற்ற பதட்டத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது கைபேசியில்  படம்பிடித்து அதை யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்து விட்டார்.

இந்தக் காணொளி வேகமாகப் பரவியதையடுத்து நாடு முழுவதும் அந்தக் காவல்துறை அதிகாரிக்கு எதிராகக் கடும் கண்டனம் கிளம்பியது.

இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரது  சிறுபிள்ளைத் தனமான செயல் கவலையளிப்பதாக மற்ற காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.