மாலே, மார்ச்.7- மாலத்தீவில் அதிபராக முகமது நஷீத் இருந்த போது, குற்றவியல் தலைமை நீதிபதி அப்துல்லா முகமத்தை கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து நடந்த போராட்டத்தின் எதிரொலியாக நஷீத் பதவி விலகினார். வாகீத் அதிபராக பொறுப்பேற்றார்.
இதன்பின் நீதிபதியை கைது செய்ய சட்டவிரோதமாக உத்தரவு பிறப்பித்ததாக நஷீத் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது. அவருக்கு நீதிமன்றம் கைது ஆணையை பிறப்பித்தது.
அவர் பிப்ரவரி 13ம் தேதி இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். அதன் பின் இந்திய அதிகாரிகள் அங்கு சென்று அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்படவே 23ம் தேதி தூதரகத்தில் இருந்து நஷீத் வெளியேறினார். இதன்பின், நஷீத்தை கைது செய்ய நீதிமன்றம் மீண்டும் கைது ஆணையை பிறப்பித்தது.
அதன்படி, நசீத்தை போலீ சார் நேற்று முன்தினம் கைது செய்தனர். நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவரது கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.