Home தொழில் நுட்பம் அமெரிக்காவில் ஆப்பிள் மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் முத்து நெடுமாறன்!

அமெரிக்காவில் ஆப்பிள் மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் முத்து நெடுமாறன்!

655
0
SHARE
Ad

சான்பிரான்சிஸ்கோ, ஜூன் 9 – ஆண்டுதோறும் நடைபெறும் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெறும் அனைத்துலக ஆப்பிள் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களின் மாநாடு உலகப் புகழ் பெற்றதாகும்.

Muthunedumaran

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அடுத்த கட்ட தொழில் நுட்ப அறிமுகங்கள் என்ன, கருவிகள் என்ன என்பது போன்ற விளக்கங்கள் மேம்பாட்டாளர்களுக்கு இந்த மாநாட்டில் வழங்கப்படும்.

#TamilSchoolmychoice

இந்த மாநாட்டில் மலேசியாவிலிருந்து கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவறாமல் கலந்து கொண்டு வரும் முத்து நெடுமாறன்,  இந்த ஆண்டும் கலந்து கொண்டுள்ளார்.

முத்து நெடுமாறன் முரசு அஞ்சல் மென்பொருளின் உருவாக்குநர் என்பதோடு, செல்லினம், செல்லியல் இணையத் தளங்களின் நிறுவனரும், தொழில் நுட்ப வடிவமைப்பாளரும் ஆவார்.