Home கலை உலகம் அண்ணன் சூர்யாவைத் தொடர்ந்து தம்பி கார்த்தியும் பேயாக மாறுகிறார்! 

அண்ணன் சூர்யாவைத் தொடர்ந்து தம்பி கார்த்தியும் பேயாக மாறுகிறார்! 

1256
0
SHARE
Ad

Kashmoroசென்னை, ஜூன் 9 – “தமிழ் சினிமாவின் தற்போதைய சூப்பர் ஸ்டார் பேய் தான்” இது சமீபத்தில் நடிகர் சந்தானம் பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்து. அவர் கூறியது போல் கடந்த இரண்டு வருடங்களில் மனதில் வைத்துக் கொள்ள முடியாத அளவிற்குத் தமிழ்ச் சினிமாவில் பேய்க் கதைகள் கோலோச்சி உள்ளன. வளர்ந்து வரும் கதாநாயகன் அருள்நிதி முதல் மாஸ் கதாநாயகன் சூர்யா வரை அனைவருக்கும் பேய் பிடித்திருந்தது.

இந்நிலையில் அவர்கள் வரிசையில் சமீபத்திய இணைப்பாகச் சேர்ந்துள்ளவர் சூர்யாவின் தம்பி கார்த்தி. தொடர்ந்து மசாலாப் படங்களால் துவண்டு இருந்த கார்த்திக்கு மெட்ராஸ் மற்றும் கொம்பன் படங்களின் வெற்றி கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. வித்தியாசமான படங்கள் தான் தன்னை நிலைத்து நிற்கச் செய்யும் என்பதை உணர்ந்த அவர், கோகுல் இயக்கத்தில் ‘காஷ்மோரா’ என்ற படத்தில் பேயாக நடித்து வருகிறார்.

வழக்கமான பேய்ப் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஹாலிவுட் தரத்தில் உருவாகி வரும் இந்தப் படம், தனது மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் எனக் கார்த்தி நம்புவதாகச் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்தப் படத்தில் கார்த்தியுடன், நயன்தாரா மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோர் கதாநாயகிகளாகவும், நடிகர் விவேக் கார்த்திக்கு அப்பாவாகவும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.