Home உலகம் இந்தியாவின் அழுத்தத்தால் வங்கிகளின் விதிகளைக் கடுமையாக்கிய சுவிட்சர்லாந்து!

இந்தியாவின் அழுத்தத்தால் வங்கிகளின் விதிகளைக் கடுமையாக்கிய சுவிட்சர்லாந்து!

641
0
SHARE
Ad

swissபெர்ன், ஜூன் 9 – சுவிட்சர்லாந்து அரசு அந்நாட்டில் உள்ள வங்கிகளின் விதிகளைக் கடுமையாக்கி இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டின் வங்கிகளில் தொடர்ச்சியாகக் கருப்புப் பணத்தை முதலீடாகக் குவித்து வந்த வெளிநாட்டினர் சற்றே ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்துச் சுவிட்சர்லாந்து அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“எங்கள் நாட்டின் வங்கிகளை ஒருங்கமைக்கவும், விதிகளைக் கடுமையாக்கவும் முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் சட்டவிரோதமான முதலீடுகளை, இனி எங்கள் வங்கிகளில் குவிக்க முடியாது. ஒருவேளை அதற்கான முயற்சிகள் நடந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்படும்.”

#TamilSchoolmychoice

“அதேபோல் கருப்புப் பணம் மற்றும் கணக்கில் காட்டப்படாத சொத்துகளை முதலீடு செய்யும் புதிய வாடிக்கையாளர்களுடனான வணிகத் தொடர்புகள் முற்றிலும் முறித்துக் கொள்ளப்படும். ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் முதலீடுகளில் சரியான கணக்குகளைக் காட்டவில்லை எனில், அவர்கள் உடனடியாகத் தேவையான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்” என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த ஆட்சியைக் காட்டிலும் கருப்புப் பண விவகாரத்தில் அதிக அக்கறை காட்டி வருகிறது. இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளின் அழுத்தத்தால் தான் இதுவரை கடைப்பிடிக்கப்படாத விதிகளைச் சுவிட்சர்லாந்து அரசு தற்போது விதித்துள்ளது.