கோலாலம்பூர், மார்ச்.7- “இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக உதவ மலேசிய அரசாங்கம் மலேசியத் தமிழ்ப் பேரவைக்கு வழங்கிய 32 லட்சம் நிதிக்கான சரியான கணக்கை, பொதுமக்களின் முன் வழக்கறிஞர் ஆறுமுகம் ஆதரத்துடன் நிரூபிக்க வேண்டும் . அதைவிடுத்து, தவறான வதந்திகளையும், பொய் புகார்களையும் அவர் செய்ய வேண்டாம்” என்று செய்தியாளர்களிடம் பூச்சோங் முரளி கூறியுள்ளார்.
இச்சர்சையைத் தொடர்ந்து, நேற்று நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில்,“போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு மலேசிய அரசு 32 லட்சம் ரிங்கிட் கொடுத்த கணக்கை தான் நான் கேட்கிறேன். ஆறுமுகம் பணத்தை திருடிவிட்டார் என்று புகார் செய்யவில்லை. மலேசிய அரசாங்கம் வழங்கிய 32 லட்சம் ரிங்கிட் நிதி பணத்தை கணக்கு கேட்பது தவறா? இதனை காவல் துறைக்கு புகார் தொடுத்தது குற்றமா?” என்று முரளி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொடுக்கப்பட்ட மாதிரி காசோலை கிடைக்கப் பெற்றிருந்தால் மலேசியத் தமிழ் பேரவையின் கணக்கில் தான் சேர்க்கப்பட்டிருக்கும். எனவே, அந்த கணக்கை சரியான முறையில் காட்ட வேண்டியது வழக்கறிஞர் ஆறுமுகத்தின் கடமை என்றும் கூறியுள்ளார்.
இதுபற்றிய விரிவான செய்தி, நேற்று செல்லியல்.காமில் வெளியிடப்பட்டுள்ளது.