Home இந்தியா முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பாராட்டு!

முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பாராட்டு!

495
0
SHARE
Ad

New-CM_Jaya3(C)_2ஆஸ்திரேலியா, ஜூன் 11 – தமிழ் வளர்ச்சிக்கு அளிக்கப்பட்டு வரும் ஊக்கத்துக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

அந்நாட்டு ஹைன்த்மார்ஷ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான மெட் வில்லியம்ஸ், நாடாளுமன்றத்தில் பேசுகையில், அடிலெய்டு தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதுடன், அந்தச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 2 நாள் பன்னாட்டு கருத்தரங்கு பற்றியும் பாராட்டிப் பேசினார்.

அப்போது தமிழுக்கும், தமிழ்க் கலாசாரம், கலைகளுக்கும் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிவரும் சிறந்த சேவைகள் பற்றி வெகுவாகப் புகழ்ந்துரைத்தார்.

#TamilSchoolmychoice

இதுகுறித்து, அடிலெய்ட் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் லாரன்ஸ் அண்ணாதுரை, முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். தங்களின் தலைமையில் தமிழகமும், உலகத் தமிழர்களும் தலைநிமிர முடியும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழக மக்களின் நலனுக்காகவும், எதிர்கால வளர்ச்சிக்காகவும் தாங்கள் எடுத்து வரும் ஒவ்வொரு செயல் திட்டமும், தீர்மானங்களும் தமிழகம் தாண்டி வெளிநாடுவாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.