Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியாவில் ஐபோன்கள் உற்பத்தி – ஆப்பிளுடன் ஃபோக்ஸ்கான் பேச்சுவார்த்தை!

இந்தியாவில் ஐபோன்கள் உற்பத்தி – ஆப்பிளுடன் ஃபோக்ஸ்கான் பேச்சுவார்த்தை!

465
0
SHARE
Ad

Foxconnபுது டெல்லி, ஜூன் 12 – இந்தியாவில் குறைந்த விலையில் ஐபோன்களை உற்பத்தி செய்ய, ஆப்பிள் கருவிகளின் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான ‘ஃபோக்ஸ்கான்’ (Foxconn) பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக அளவில் செல்பேசிகள் விற்பனையில் இந்திய சந்தைகள் மூன்றாவது இடம் பிடித்துள்ளன.சாம்சுங், சியாவுமி என பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய வர்த்தகத்தில் வாரிக் குவித்து வந்தாலும், ஆப்பிளுக்கு இந்திய சந்தை பெரிய அளவிலான இலாபத்தை கொடுப்பதில்லை. அதற்கு காரணம் ஐபோன்களின் விலை தான். இந்நிலையில் தான் தைவானைச் சேர்ந்த ஐபோன்கள் உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்கான், இந்தியாவிலேயே ஐபோன்களை உற்பத்தி செய்து விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் சீனாவில் செயல்பட்டு வரும் ஃபோக்ஸ்கான் கிளை பொருளாதார சரிவுகளை சந்தித்து வருவதால், வளர்ச்சி பெற்று வரும் இந்தியாவில் தனது வர்த்தகத்தை மாற்ற அந்நிறுவனம் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இது பற்றி ஃபோக்ஸ்கான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அடுத்த சில ஆண்டுகளுக்குள் இந்தியாவில் எங்களது தொழிற்சாலை மற்றும் தகவல் மையங்களை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றோம். எனினும் அது பற்றிய முழு விவரங்களை இப்போது அறிவிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளது.

ஐபோன்கள் மட்டுமல்லாது ஐபேட், ஐபாட் உள்ளிட்ட ஆப்பிள் கருவிகளையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய ஃபோக்ஸ்கான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஃபோக்ஸ்கான் இந்த முயற்சி பற்றி ஆப்பிளுக்கான இந்தியப் பிரதிநிதியிடம் கேட்டபோது, “எத்தகைய ஆருடங்களுக்கும் தற்போது விளக்கம் அளிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.