Home Slider மணிரத்னத்தின் “கடல்” பிப்ரவரியில் வெளியாகிறது

மணிரத்னத்தின் “கடல்” பிப்ரவரியில் வெளியாகிறது

1106
0
SHARE
Ad

ஜனவரி 1 – புகழ் பெற்ற இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம், அன்றைய கனவுக் கன்னி நடிகை ராதாவின் மகள் துளசி, அரவிந்த்சாமி, அர்ஜுன், லட்சுமி மஞ்சு மற்றும் பலர் நடித்து இருக்கும் ‘கடல்’ படம் பிப்ரவரி 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மணிரத்னத்தின் முந்தைய படமான “ராவணன்” இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டாலும் பலத்த தோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து மணிரத்னம் நேரடியாக தமிழில் இயக்கி வரும் “கடல்” பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதற்கான முக்கிய காரணம், நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் நடித்து வெளிவரப் போகும் முதல் படம் என்பதோடு, அவரோடு ஜோடி சேர்ந்திருப்பவர் நடிகை ராதாவின் மகள் துளசி என்பதும் ஆகும்.

#TamilSchoolmychoice

இந்த படத்திற்கு இசை வெளியீட்டு விழா என்று எதுவும் நடைபெறாமல் நேரடியாக கடைகளில் சிடி விற்பனைக்கு வந்தது. அதுமட்டுமன்றி ‘கடல்’ படத்தில் நாயகன், நாயகி இருவரது தோற்றங்களும் படத்தின் புகைப்படங்களும் இதுவரை முழுமையாக வெளியிடவில்லை.

புத்தாண்டு முதல் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. படத்தினை வெளியிட இருப்பது ஜெமினி நிறுவனம்.