Home வணிகம்/தொழில் நுட்பம் இந்திய நிறுவனமான ஹால்திராமின் உணவுப் பண்டங்கள் ஆபத்தானவை – அமெரிக்கா!

இந்திய நிறுவனமான ஹால்திராமின் உணவுப் பண்டங்கள் ஆபத்தானவை – அமெரிக்கா!

604
0
SHARE
Ad

aloo-parathaநியூ யார்க், ஜூன் 14 – இந்திய நிறுவனமான ஹால்திராமின் உணவுப் பண்டங்களில் அதிக அளவிலான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும் இவற்றில் பாக்டீரியா கிருமித் தொற்றும் அதிகம் இருப்பதால் இவை சாப்பிடுவதற்கு உகந்ததல்ல என அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கண்காணிப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 1937-ம் ஆண்டு முதல் இந்தியாவில் உணவு மற்றும் தின்பண்டங்கள் வர்த்தகத்தில் கோலோச்சி வரும் ஹால்திராம் நிறுவனம், மற்ற நாடுகளில் வெற்றிக் கொடி நாட்டிய ‘மெக் டொனால்ட்’ (McDonald), ‘டாமினோஸ்’ (Domino) போன்ற நிறுவனங்களையே வீழ்த்தி இங்கு அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது. உலக நாடுகளுக்கு இந்நிறுவனம் பல உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தாலும், அமெரிக்காவில் தொடர்ச்சியாக 86 முறை இதன் தயாரிப்புகளுக்கு இறக்குமதி செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் ஹால்திராம் உணவுப் பண்டங்களில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் தான் என்கிறது அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கண்காணிப்பு நிர்வாகம்.

#TamilSchoolmychoice

இது பற்றி அந்த அமைப்பின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள குறிப்புகளில், “இந்திய உணவுப் பொருட்களில் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் ரசாயனங்கள் எப்போதும் அதிகமாகவே இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அவற்றில் பாக்டீரியா கிருமித் தொற்றும் அதிகம். அதன் காரணமாகவே அப்பண்டங்களுக்கு நாங்கள் மக்கள் நலன் கருதி அனுமதி மறுத்து வருகின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது

இது பற்றி ஹால்திராம் நிறுவனத்தின் நிர்வாகிகளுள் ஒருவர் கூறுகையில், “இந்திய உணவுக் கட்டுப்பாட்டு மையம் அனுமதிக்கும் ரசாயனங்களைத் தான் நாங்கள் உபயோகப்படுத்துகிறோம். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் சில ரசாயனங்களை அனுமதிப்பதில்லை. ஆனால் எங்கள் தயாரிப்புகள் 100 சதவீதம் பாதுகாப்பானவை தான்” என்று தெரிவித்துள்ளார்.