Home மலேசியா மலேசிய விமானப் போக்குவரத்து, சரக்கு சேவைகளில் ஆர்வம் காட்டும் லுஃப்தான்சா!

மலேசிய விமானப் போக்குவரத்து, சரக்கு சேவைகளில் ஆர்வம் காட்டும் லுஃப்தான்சா!

573
0
SHARE
Ad

Lufthansa_Cargoபிராங்ஃபர்ட், ஜூன் 14 – மாஸ் நிறுவனம் தனது மறுசீரமைப்பு நடவடிக்கையாக பிராங்ஃபர்ட்டிற்கான சரக்கு விமானப் போக்குவரத்துச் சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ள நிலையில், லுஃப்தான்சா இந்தச் சேவையில் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், மலேசிய விமானப் போக்குவரத்துச் சந்தை மற்றும் வர்த்தகம் எப்போதும் இலாபம் தரக் கூடியதாக இருக்கும். அதனால் எங்கள் நிறுவனம் மலேசிய சந்தைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் சரக்குப் போக்குவரத்துச் சேவைக்காகப் பிராங்ஃபர்ட்டிலிருந்து கோலாலம்பூருக்கு வாரத்திற்கு 5 விமானங்களை அனுப்ப முடிவு செய்துள்ளது.

இது பற்றி அந்நிறுவனம் வட்டார இயக்குனர் ஃபிராங்க் பெல்னர் கூறுகையில், “மாஸ் நிறுவனம் பிராங்ஃபர்ட்டிற்கான சரக்குப் பரிமாற்ற சேவையை நிறுத்தியது, அந்நிறுவனத்தின் தனிப்பட்ட முடிவாகும். எங்களைப் பொருத்தவரையில் மலேசிய வர்த்தகத்தை நாங்கள் அதிகம் விரும்புகின்றோம்.”

#TamilSchoolmychoice

“ஒட்டுமொத்த ஆசியாவில் மலேசியாவின் வர்த்தகம் எங்களுக்கு நிறைவை அளிக்கிறது. வாரத்திற்கு 70 முதல் 100 டன்களில் பயணிகளின் சரக்குகளை நாங்கள் இடமாற்றம் செய்கின்றோம். இதன் காரணமாக வர்த்தகம் அதிகரித்தது மட்டுமல்லாமல் பயணிகளின் வரத்தும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.