Home தொழில் நுட்பம் அண்டிரொய்டு தளத்தில் திறன்பேசிகளைத் தயாரிக்கும் முடிவில் ப்ளாக் பெர்ரி!

அண்டிரொய்டு தளத்தில் திறன்பேசிகளைத் தயாரிக்கும் முடிவில் ப்ளாக் பெர்ரி!

641
0
SHARE
Ad

டொரண்டோ, ஜூன் 14 – தாமதமான முடிவாக இருந்தாலும், சரியான நேரத்தில் அண்டிரொய்டு தளத்தினைப் ப்ளாக் பெர்ரி நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் முடிவிற்கு வந்துள்ளது. இதன் மூலம் கடுமையான பொருளாதாரச் சரிவிற்குத் தள்ளப்பட்டுள்ள அந்நிறுவனத்திற்கு அண்டிரொய்டு புத்துயிர் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ளாக் பெர்ரி நிறுவனம் தனது அடுத்து வரும் திறன்பேசிகளில் அண்டிரொய்டு தளத்தை மேம்படுத்த இருப்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அந்நிறுவனத்திற்கான நெருங்கிய வட்டாரங்கள் இந்த தகவலை உறுதிபடுத்தி உள்ளன. திறன்பேசிகளுக்கான வன்பொருட்களில் இதுநாள் வரை அதிகக் கவனம் செலுத்தி வந்த ப்ளாக் பெர்ரி, முதல் முறையாகத் தனது மென்பொருள் மற்றும் செயலிகளுக்கான மேலாண்மை முறையை முற்றிலும் மாற்ற முடிவு செய்துள்ளது.

ப்ளாக் பெர்ரி நிறுவனத்தின் இந்த முடிவு பற்றித் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான எடேர்ல் குழுமத்தின் தலைவர் ராபர்ட் எடேர்ல் கூறுகையில், “வர்த்தக ரீதியாகப் ப்ளாக் பெர்ரி மீண்டும் தனது பயணத்தைத் தொடங்க இதைவிட சரியான முடிவு வேறு ஒன்றும் இல்லை. அண்டிரொய்டை பொருத்தவரையில் குறிப்பிடத்தக்க குறைபாடு என்ன வென்றால் பாதுகாப்புக் குறைபாடுகள் தான் அதனைப் ப்ளாக் பெர்ரி சரி செய்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ப்ளாக் பெர்ரி நிறுவனம் அடுத்து வெளியிட இருக்கும் சில்வர் திறன்பேசிகள் அண்டிரொய்டு தளத்தில் மேம்படுத்தப்பட்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ப்ளாக் பெர்ரி உலகச் சந்தையில் தன்னை நிலைப்படுத்த வேண்டுமெனில் அண்டிரொய்டு தளத்தினை மேம்படுத்திதான் ஆக வேண்டும் என அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜிம் பால்சில்லி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது,