Home அவசியம் படிக்க வேண்டியவை “ஆப்பிளுடனான போட்டியினால் நாங்கள் தோற்றோம்” – ப்ளாக் பெர்ரி முன்னாள் நிர்வாகி பேட்டி!    

“ஆப்பிளுடனான போட்டியினால் நாங்கள் தோற்றோம்” – ப்ளாக் பெர்ரி முன்னாள் நிர்வாகி பேட்டி!    

760
0
SHARE
Ad

appleடொரண்டோ, ஜூன் 11 – “ஆப்பிள் ஐபோன்களை அறிமுகப்படுத்திய தருணத்தில், செல்பேசி உலகில் உச்சத்தில் இருந்த ப்ளாக் பெர்ரி, தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போட வேண்டியதாயிற்று. அன்று முதல் எங்கள் தோல்வியின் அத்தியாயம் தொடங்கியது” என ப்ளாக் பெர்ரி நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி ஜிம் பால்சில்லி தெரிவித்துள்ளார்.

செல்பேசி உலகில் பெரிய அளவிலான மாற்றத்தைக் கொண்டு வந்த ப்ளாக் பெர்ரி நிறுவனம், சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வரை தொழில் அதிபர்கள் மற்றும் வர்த்தகர்களின் அந்தஸ்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. அதன் பின்னர், அந்நிறுவனம் சிறிது சிறிதாகச் சரியத் தொடங்கியது. இன்று பெரிய அளவிலான சரிவைச் சந்தித்துள்ளதால், அந்நிறுவனத்தைச் சியாவுமி அல்லது மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் கைப்பற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜிம் பால்சில்லி அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் முதல் முறையாக எங்கள் செல்பேசியில் மின்னஞ்சல் வசதியை ஏற்படுத்தினோம். அது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் அறிமுகமான ஐபோன்களில் மின்னஞ்சல் மட்டுமல்லாமல் இணையம் தொடர்பான கூடுதல் வசதிகள் இடம் பெற்றன. அதனால் எங்கள் இருப்பை நிலை நிறுத்தும் கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டோம்.”

#TamilSchoolmychoice

“அதனைத் தொடர்ந்து குறுகிய காலத்தில் தொடுதிரை போன்ற அதி நவீன வசதிகளுடன் ப்ளாக் பெர்ரி ‘ஸ்ட்ராம்’ (Storm) செல்பேசிகளை அறிமுகப்படுத்தினோம். ஆனால் அது எங்களுக்கு மீள முடியாத அடியைக் கொடுத்தது. அதன் பின்னர் தான் எங்கள் தவறை நாங்கள் உணர்ந்தோம்”

“நாட்கள் செல்லச் செல்ல ஆப்பிள் தனது தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கத் தொடங்கியது. இதனால் எங்கள் வளர்ச்சி இறங்கு முகமானது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “தற்சமயம் ப்ளாக் பெர்ரி நிறுவனம் தோல்வியின் பிடியில் இருந்து மீள வேண்டுமானால், ஆப்பிள் அல்லது அண்டிரொய்டு இயங்குதளங்களை அதன் திறன்பேசிகளில் மேம்படுத்தியே ஆக வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.