Home வணிகம்/தொழில் நுட்பம் பொருளாதார சரிவு – பணி நீக்கத்திற்கு தயாராகும் பிளாக்பெர்ரி!

பொருளாதார சரிவு – பணி நீக்கத்திற்கு தயாராகும் பிளாக்பெர்ரி!

597
0
SHARE
Ad

blackberryஒட்டாவா, மே 25 – பிளாக்பெர்ரி நிறுவனம் செல்பேசி வர்த்தகத்தில் மீண்டும் பொருளாதார சரிவுகளை சந்தித்து வருவதால் ஊழியர்களின் வேலை நீக்கத்திற்கு தயாராகி வருகிறது. உலக அளவில் உள்ள அதன் கிளைகளில் பணி நீக்கம் நடைபெற இருப்பதால் மொத்தமாக எத்தனை ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்கப்போகின்றனர் என்பது தெரியவில்லை.

இது தொடர்பாக பிளாக்பெர்ரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சில சமயங்களில் வளர்ச்சியை முன்னிறுத்தி சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. ஊழியர்களின்  இடமாற்றமும் பணி நீக்கமும் நிறுவனத்தின் வர்த்தகத்தை முன்னேற்றும் என்று எதிர்பார்க்கின்றோம். இது தொடர்பான அறிவிப்புகளை நிர்வாகம் வெளியிடும்.”

“விரைவில் நடைபெற இருக்கும் இந்த பணி நீக்கம், பிளாக்பெர்ரியின் அனைத்துவிதமான வர்த்தக பிரிவுகளிலும் நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தற்சமயம் பிளாக்பெர்ரி நிறுவனத்தில் உலக அளவில் உள்ள கிளைகளில் மொத்தம் 6225  ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் எத்தனை பேர் பணி நீக்கத்தை சந்திக்க போகின்றனர் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.