Home நாடு பிரிக்பீல்ட்ஸ்: மர்ம ஆசாமி துரத்த ஆற்றில் குதித்த 4 பெண்கள்!

பிரிக்பீல்ட்ஸ்: மர்ம ஆசாமி துரத்த ஆற்றில் குதித்த 4 பெண்கள்!

546
0
SHARE
Ad
maxresdefault

கோலாலம்பூர், மே 25 – நேற்று இரவு தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் பகுதி அருகே கிள்ளான் ஆற்றில் குதித்த 4 பெண்களில், இருவர் பொதுமக்களால் காப்பாற்றப்பட, மற்ற இருவர் ஆற்றில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இது குறித்து செபுத்தே தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் தலைவர் ஜபாரி தாஜூடின் கூறுகையில், “சுமார் 18 முதல் 20 வயதுடைய 5 பெண்கள், நேற்று இரவு 7 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த போது, மோட்டாரில் வந்த ஒருவனால் அவர்கள் துரத்திச் செல்லப்பட்டுள்ளனர்.”

“பயத்தில் உச்சத்தில் ஓடிக் கொண்டிருந்த 5 பெண்களில், 4 பேர் திடீரென ஆற்றில் குதிக்க, மற்ற ஒருவர் உதவி கேட்டபடி ஆற்றுப் படுக்கை அருகே தப்பி ஓடியுள்ளார்” என்று நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

ஆற்றில் குதித்த 4 பெண்களில் இருவரை அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீட்டுள்ளனர். ஆனால் மற்ற இரு வெளிநாட்டுப் பெண்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

காப்பாற்றப்பட்ட மூன்று பெண்கள் தற்போது பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

நேற்று இரவு ஆற்றில் தேடுதல் பணி நடத்தப்பட்டு பின்னர் நிறுத்திக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், இன்று காலை மீண்டும் தேடுதல் பணி துவங்கியுள்ளது.

ஆற்றில் மூழ்கிய இரு பெண்களும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகின்றது.