Home வணிகம்/தொழில் நுட்பம் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தை வாங்க மைக்ரோசாப்ட் எடுத்த முயற்சி தோல்வி!

சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தை வாங்க மைக்ரோசாப்ட் எடுத்த முயற்சி தோல்வி!

592
0
SHARE
Ad

nadellabenioff1கோலாலம்பூர், மே 25 – கிளவுட் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் சேல்ஸ்ஃபோர்ஸ்.காம் நிறுவனத்தை வாங்குவதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.

சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்திற்கு மைக்ரோசாப்ட் நிர்ணயித்த விலை மதிப்பீடு ஒத்துவராததால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உலக அளவில் கிளவுட் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் பன்னாட்டு நிறுவனமான சேல்ஸ்ஃபோர்ஸ்.காமை சுமார் 55 பில்லியன் டாலர்களுக்கு வாங்க மைக்ரோசாப்ட் முயற்சித்தது.  கிளவுட் தொழில்நுட்பத்தில் மைக்ரோசாப்ட் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே களமிறங்கினாலும், சேல்ஸ்ஃபோர்ஸ் போன்ற ஒரு நிறுவனத்தை வைத்திருந்தால் தொழில்நுட்ப சந்தைகளில் பெரும் வர்த்தகத்தை ஈட்டலாம் என்பதே மைக்ரோசாப்ட்டின் திட்டம்.

#TamilSchoolmychoice

எனினும், மைக்ரோசாப்ட் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்திற்கு நிர்ணயித்து இருந்த 55 பில்லியன் டாலர்கள் என்ற விலையை சேல்ஸ்ஃபோர்ஸ் நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டது. மேலும் அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் பெனியாஃப், சுமார் 70 பில்லியன் டாலர்கள் வர்த்தகத்திற்கு மைக்ரோசாப்ட் சம்மதித்தால் நிறுவனத்தை விற்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

எனினும் இதுபற்றி கருத்து தெரிவிக்க இரு நிறுவனங்களும் மறுத்துவிட்டன.