Home இந்தியா அதிமுக, திமுகவுடன் கூட்டணி கிடையாது – அருண் ஜெட்லி!

அதிமுக, திமுகவுடன் கூட்டணி கிடையாது – அருண் ஜெட்லி!

533
0
SHARE
Ad

arun_jaitley_2414383fபுதுடெல்லி, மே 25 – தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி கிடையாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

“பாஜக தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக ஆட்சியமைத்துள்ளது. முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் 8 மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது”.

“சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர். சமூக பிரச்சனை ஏற்படாத வகையில் உள்நாட்டு பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது”.

#TamilSchoolmychoice

“காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் அலுவலகத்திற்கு ஏற்பட்ட களங்கம் தற்போது நீங்கியுள்ளது. நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட்டு, மத்திய அரசு தனது எதிர்கால பாதையை தெளிவாக வகுத்து செயல்பட்டு வருகிறது”.

“தற்போதைய நிலவரப்படி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனி அணி அமைத்து போட்டியிடும் முடிவில் உள்ளது. மேலும், தமிழக அரசின் நலதிட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்புக் கொடுக்கும்” என்று அருண் ஜெட்லி கூறினார்.