Home கலை உலகம் கேன்ஸ் திரைப்பட விருதை வென்றது ‘தீபன்’

கேன்ஸ் திரைப்பட விருதை வென்றது ‘தீபன்’

609
0
SHARE
Ad

Cannes-deepan-2

பிரான்ஸ், மே 25 – பிரான்சில் நேற்றிரவு நடந்த உலகப் புகழ்பெற்ற 68-வது கேன்ஸ் திரைப்பட விழாவில், முன்னாள் ஈழப் போராளியின் புலம்பெயர் வாழ்வை சித்திரிக்கும் தீபன் திரைப்படம், ‘Palme d’Or’  என்ற உயரிய விருதை பெற்றுள்ளது.

பிரான்சை சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான ஜக்குவஸ் ஆடியார்ட், இயக்கிய இந்த திரைப்படம், ஈழப் போரில் பங்கெடுத்த முன்னாள் போராளி ஒருவரும், மற்றொரு தாயும் மகளும் பிரான்சில் அடைக்கலம் தேடியதில் எதிர்கொள்ளும் போராட்டங்களை சித்திரிப்பதாகும்.

#TamilSchoolmychoice

தீபன் உள்ளிட்ட 19 திரைப்படங்கள், இந்த விழாவின் உயர் விருதான Palme d’Or விருதுக்கு போட்டியிட்டன.

எழுத்தாளர் ஷோபா சக்தி, தீபன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.