Home வணிகம்/தொழில் நுட்பம் மேகியைத் தொடர்ந்து காம்ப்ளானிலும் புழுக்கள்!

மேகியைத் தொடர்ந்து காம்ப்ளானிலும் புழுக்கள்!

585
0
SHARE
Ad

complan-plain-refill-500gm-tall-packலக்னோ, ஜூன் 15 – உத்தரப்பிரதேசத்தில் காம்ப்ளான் பாக்கெட்டில் நூற்றுக்கணக்கான இறந்த புழுக்கள் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைக்குக் கொடுப்பதற்காக, ஆரோக்கிய பானமான ‘காம்ப்ளான்’ வாங்கியுள்ளார்.

இந்தாண்டு மார்ச் மாதம் தயாரிக்கப்பட்ட அந்தக் காம்ப்ளான் பாக்கெட்டில், நூற்றுக்கணக்கான வெள்ளை மற்றும் கருப்பு நிறப் புழுக்கள் இறந்த நிலையில் இருப்பது கண்டு அப்பெண் அதிர்ச்சி அடைந்தார்.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக அப்பெண்ணின் கணவர் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயக் கழகத்திடம் புகார் அளித்துள்ளார். அந்தக் காம்ப்ளான் பாக்கெட் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தப் பெண் கூறும் போது:

“பல ஆண்டுகளாகவே காம்ப்ளானைப் பயன்படுத்தி வருகிறோம். நூற்றுக்கணக்கான புழுக்கள் என்பதால் பார்க்க முடிந்தது. குறைவாக இருந்திருந்தால் எப்படித் தெரிந்திருக்கும். மேகி சாப்பிடுவதை நிறுத்தியதைப் போல காம்ப்ளான் சத்து மாவு சாப்பிடுவதை நிறுத்தப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், இம்மாதம் 8-ஆம் தேதி உத்திரப்பிரதேசத்திலேயே வேறொரு மாவட்டத்தில் காம்ப்ளான் பாக்கெட்டில் பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு ரசாயனம் கலக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, இந்தியாவின் பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், காம்ப்ளானும் இத்தகைய பிரச்சினையில் சிக்கியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.