Home கலை உலகம் பணத்தில் விஜய்க்கு அடுத்து ரஜினி; புகழில் அஜீத்திற்கு அடுத்து ரஜினி – போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியீடு!

பணத்தில் விஜய்க்கு அடுத்து ரஜினி; புகழில் அஜீத்திற்கு அடுத்து ரஜினி – போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியீடு!

549
0
SHARE
Ad

rajini-vijay-ajith45மும்பை, ஜூன் 15 – போர்ப்ஸ் பத்திரிக்கை இன்று காலையில் பணம், புகழ், செல்வாக்கு அடிப்படையில் இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் பணம், புகழ், செல்வாக்கு போன்றவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தப் பட்டியலில் முதலிடத்தில் நடிகர் சல்மான் கான் உள்ளார்.

வருடத்திற்கு 244 கோடிக்கும் அதிகமான வருமானம் பெற்று அதிகம் சம்பாதிப்பவராக மட்டும் இல்லாமல், இந்திய அளவில் மிகுந்த புகழ் வாய்ந்தவராகவும் முதலிடத்தில் உள்ளார் சல்மான் கான்.

இவரைத் தொடர்ந்து நடிகர் ஷாரூக்கான் 202 கோடியுடன் பணத்தில் இரண்டாம் இடத்திலும், புகழில் 7-ஆம் இடத்திலும் இருக்கிறார். விளையாட்டு வீரரான டோணிக்குப் பணத்தில் 5-ஆம் இடமும், புகழில் மூன்றாம் இடமும் கிடைத்துள்ளது.

#TamilSchoolmychoice

டோணியையும் மிஞ்சிப் புகழில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் விராத் கோலி. பண விஷயத்தில் அவருக்கு 12-ஆம் இடம் கிடைத்திருக்கிறது. நடிகைகளில் தீபிகா படுகோன் புகழில் 5-ஆம் இடத்திலும், பணத்தில் 9-வது இடத்திலும் இருக்கிறார்.

தமிழ் நடிகர்களில் இந்தப் பட்டியலில், அஜீத் மற்றும் ரஜினியை பண விசயத்தில் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருக்கிறார் நடிகர் விஜய். ரஜினிக்குப் பண விசயத்தில் 21-வது இடமும் புகழ் விஷயத்தில் 89 இடமும் கிடைத்துள்ளது.

விஜய்க்குப் பண விசயத்தில் 20-வது இடமும் புகழ் விசயத்தில் 80-வது இடமும் கிடைத்துள்ளது. ரஜினி மற்றும் விஜய்யைப் பண விசயத்தில் பிந்திய அஜீத், புகழில் பெற்ற இடம் 78. ஆச்சரியமாக இந்தப் பட்டியலில் நடிகர் தனுஷும் இடம்பெற்று இருக்கிறார்.