Home நாடு “எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் கூறுங்கள்” – இணையவாசிகளுக்கு நஸ்ரி எச்சரிக்கை

“எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் கூறுங்கள்” – இணையவாசிகளுக்கு நஸ்ரி எச்சரிக்கை

537
0
SHARE
Ad

nazriகோலாலம்பூர், ஜூன் 15 – “எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் சொல்லுங்கள், பேஸ்புக், டிவிட்டர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை” என தன்னைப் பற்றி பேஸ்புக்கில் குறைகூறுபவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் கலாச்சாரச் சுற்றுலாத் துறை அமைச்சர் நஸ்ரி அசிஸ்.

முகநூலில் கணக்கு இல்லாத ஒரே அமைச்சர் நானாகத் தான் இருப்பேன் என்று கூறியுள்ள நஸ்ரி, தன்னை விமர்சிப்பவர்கள் நேருக்கு நேர் வந்து கூறினால் மட்டுமே தன்னால் அதற்குப் பதிலளிக்க இயலும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயிலுக்கு (படம்) எதிராக நஸ்ரி அசிஸ், “ஒதுங்கியிருங்கள்! இல்லாவிட்டால் நாங்கள் பதிலடி தருவோம்” என்ற தொனியில் கடுமையாக எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து பேஸ்புக்கில் அவருக்கு எதிராகக் கடும் விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.