கோலாலம்பூர் மார்ச் 7 – பிரதமர் நஜிப், லகாட் டத்துவில் சண்டை நடக்கும் பகுதிகளை இன்று பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி, லஹாட் டத்துவில் உள்ள பெல்டா சஹாபாட் இல்லத்தில் தற்காப்பு அமைச்சர் ஸாஹிட் ஹமிடி இன்று காலை நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும்பொழுது,
” ஓப்ஸ் டவ்லத் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நமது வீரர்களுக்கு உற்சாகமளிக்கவும், அதன் செய்பாடுகள் குறித்து தனிப்பட்ட முறையில் தெரிந்துகொள்ளவும்பிரதமர் நஜிப் லகாட் டத்து இன்று வரவிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.மேலும் பாதுக்காப்பு காரணங்களுக்காக, அவர் வரும் நேரம், இடம் ஆகியவை ரகசியமாக வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
நஜிப் சண்டை நடக்கும் பகுதி வரை செல்வாரா? என்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ” அதுபற்றி எங்களுக்கு விரைவில் தெரிவிப்பார்” என்று கூறியுள்ளார்.