Home உலகம் கடும் பனி மூட்டத்தால் அமெரிக்கா முடங்கியது: 2 ஆயிரம் விமான சேவைகள் ரத்து

கடும் பனி மூட்டத்தால் அமெரிக்கா முடங்கியது: 2 ஆயிரம் விமான சேவைகள் ரத்து

916
0
SHARE
Ad

amerikaசிகாகோ, மார்ச்.7-அமெரிக்காவில் பல இடங்களில் வரலாறு காணாத அளவுக்கு பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் பனி கொட்டி தேங்கி கிடக்கிறது.

அட்லாண்டிக் மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாகாணம் முழுவதும் பனியால் சூழப்பட்டுள்ளது. சிகாகோ நகரில் 6 அங்குலம் அளவுக்கு பனி தேங்கியுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து, விமான போக்குவரத்து ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளன.

அங்கு விமானங்கள் தரையிறங்க முடியவில்லை. அதுபோல புறப்பட்டு செல்லவும் முடியவில்லை. இதனால் 1100 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இதேநிலை தலைநகர் வாஷிங்டனிலும் நிலவுகிறது. அங்கு 3 அங்குலம் முதல் 8 அங்குலம் வரை பனிகட்டி தேங்கி உள்ளது. இதனால் 400 விமான சேவைகள்  ரத்து செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில் நாடு முழுவதும் 2 ஆயிரம் விமான சேவைகளுக்கு மேல் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

அமெரிக்காவில் அதிகபட்சமாக மேரி லாண்ட் பகுதியில் 16 அங்குலம் அளவுக்கு பனிகட்டி தேங்கியுள்ளது. சாலையில் சென்ற வாகனங்கள் தொடர்ந்து செல்லமுடியாமல் ஆங்காங்கே நிற்கின்றன. அவற்றின் மீது பனிகட்டி தேங்கியுள்ளது. இந்த பிரச்சினையால் அமெரிக்காவே முடங்கிபோய் உள்ளது.