Home உலகம் மியான்மரில் தீவிரவாதிகள் மீதான இந்திய ராணுவத் தாக்குதலுக்கு இஸ்ரேலிய தூதர் ஆதரவு!

மியான்மரில் தீவிரவாதிகள் மீதான இந்திய ராணுவத் தாக்குதலுக்கு இஸ்ரேலிய தூதர் ஆதரவு!

609
0
SHARE
Ad

isrelபுதுடில்லி, ஜூன் 15- பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களை அழிப்பதற்காக எல்லையைக் கடந்து செல்வதென்பது, தீவிரவாதத்திற்கு எதிரான புதிய வகைப் போர் முறைகளில் ஒன்றாகும் என்று இந்தியாவிற்கான இஸ்ரேலியத் தூதர் டேனியல் கார்மன் கூறியுள்ளார்.

இந்திய ராணுவம் சில நாட்களுக்கு முன்பு மியான்மர் எல்லைக்குள் புகுந்து அங்கு முகாமிட்டிருந்த கப்லாங் தீவிரவாதிகளை நிர்மூலமாக்கியது.

இதை ஆதரிக்கும் விதமாகவே டேனியல் கார்மன் இவ்வாறு கூறியுள்ளார் என்பது இதன்மூலம் தெரிகிறது.

#TamilSchoolmychoice

‘தி இந்து’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் டேனியல் கார்மன் கூறியிருப்பதாவது:

“ஐ.நா.உரிமைக் கவுன்சில் சொல்வது மட்டுமே உண்மையாக இருக்கும் என்று சர்வதேச நாடுகள் ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது.

ஒவ்வோரு நாட்டிற்கும் தங்கள் எல்லைகள் மற்றும் மதிப்பீடுகளைப் பாதுகாக்கும் உரிமை உள்ளது என்பதை நாம் மதிக்க வேண்டும்.ஏனென்றால், அதுவே ஒவ்வொரு அரசின் முழுமுதற் கடமையாகும்.

இந்தியாவும் இஸ்ரேலும் சமச்சீரற்ற போர் முறை என்ற ஒரே வகையான அச்சுறுத்தலை எதிர் கொண்டுள்ளன. நமது எல்லையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் இவ்வகைப் பயங்கரவாதத்தால் தாக்கப்படுகின்றனர்.

எனவே, இத்தகைய அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதும் ஏதிர் தாக்குதல் நடத்துவதும் வரவேற்கத்தக்க ஒன்றே!” என்றார்.

இஸ்ரேல் தூதர் இவ்வாறு பேசியுள்ளது, இரு நாடுகளுக்கும் இடையில் உறவு பலப்படுவதற்கான சமிக்ஞையாகவே தெரிகிறது.

இந்நிலையில் மோடி அடுத்த ஆறு மாதங்களுக்குள் இஸ்ரேல் பயணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவர் சென்றால், இஸ்ரேல் செல்லும் முதல் பிரதமர் என்கிற பெருமை அவரையே சேரும்.