அப்போதே அடுத்து இவர் கதாநாயகனாக வரப் போகிறார் என்பது புரிந்துவிட்டது. இப்போது நிறைய இளம் இயக்குனர்கள் அவருக்குக் கதை சொல்லி வருகிறார்களாம். தம்பிக்குப் பொருத்தமான கதையை ராகவா லாரன்ஸே தேர்வு செய்துவிட்டாராம்.
தற்போது, ராகவா லாரன்ஸ் தேர்ந்தெடுத்த கதையில் நடித்துவருகிறார் தம்பி எல்வின். படத்தின் தலைப்பு மற்றும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.