Home கலை உலகம் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியின் நிலத்தை அபகரிக்க முயன்ற மர்ம நபர்!

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியின் நிலத்தை அபகரிக்க முயன்ற மர்ம நபர்!

844
0
SHARE
Ad

rp-sowthiriசென்னை, ஜூன் 16- பிரபல சினிமாத் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, தனது பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி நடப்பதாகக் காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்த’ பூவே உனக்காக,திருப்பாச்சி, ஜில்லா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் ஆர்.பி.செளத்ரி. இவர் நடிகர் ஜீவாவின் தந்தையும் ஆவார்.

இவர் நேற்று சென்னைக் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து ஆணையர் ஜார்ஜ் அவர்களைச் சந்தித்துப் புகார் மனு ஒன்றை அளித்தார்.

#TamilSchoolmychoice

பின்பு வெளியில் வந்த அவரிடம் ஆணையரைச் சந்தித்ததற்கான காரணம் கேட்டதற்கு, வெளிப்படையாக எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இதுகுறித்துக் காவல்துறையினரிடம் கேட்ட போது: செளத்ரிக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தின் ஒருபகுதியை மர்ம நபர் ஒருவர் போலி ஆவணம் தயாரித்து அபகரிக்க முயற்சிப்பதாகவும், நிலத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுவதாகவும், அது பற்றித்தான் அவர் புகார் செய்ய வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஆனால், அந்த மர்ம நபர் யார் என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டனர். ஒருவேளை அந்த மர்ம நபர் பெரிய அரசியல் புள்ளியாக இருப்பாரோ?

செளத்ரியின் புகார் குறித்து ஆணையர் ஜார்ஜ் உடனடியாக நடவடிக்கை எடுத்துப் பிரச்சனையைத் தீர்த்து விட்டதாகவும் கூறப்பட்டது.

காவல்துறை இவ்வளவு விரைவில் செயல்பட்டுப் பிரச்சனையைத் தீர்த்து வைத்துவிட்டதென்றால் ஆச்சரியம் தான்!