Home இந்தியா லலித் மோடியின் வழக்கறிஞராக 9 ஆண்டுகள் பணியாற்றிய சுஷ்மா சுவராஜின் மகள்!

லலித் மோடியின் வழக்கறிஞராக 9 ஆண்டுகள் பணியாற்றிய சுஷ்மா சுவராஜின் மகள்!

529
0
SHARE
Ad

lalit_660_092413065625c213c3புதுடெல்லி, ஜூன் 16 -லலித் மோடிக்கு உதவியதாகs சுஷ்மா சுவராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சுஷ்மா சுவராஜின் மகளும், வழக்கறிஞருமான பன்சூரி சுவராஜ், லலித் மோடிக்காக 9 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றகளில் ஆஜராகி வருவது தெரிய வந்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் லலித் மோடிக்காக ஆஜராகும் வழக்கறிஞர்களில் ஒருவராகப் பன்சூரி சுவராஜின் பெயர், நீதிமன்ற ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி, சுஷ்மா சுவராஜின் கணவர் சுவராஜ் கவுசல், லலித் மோடிக்கு 22 ஆண்டுகளாகச் சட்ட ஆலோசனை வழங்கி வரும் தகவலும் வெளியாகி உள்ளது.

#TamilSchoolmychoice

லலித் மோடிக்கு உதவ சுஷ்மா சுவராஜ் பேசியதாகக் கூறப்படும் இங்கிலாந்து வாழ் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ், சுஷ்மா சுவராஜின் உறவினர் ஜோதிர்மாய் கவுசல், இங்கிலாந்தில் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க உதவ முன்வந்ததும் தெரிய வந்துள்ளது.