Home நாடு உடைந்தது பக்காத்தான்: கூட்டணியிலிருந்து வெளியேறியது ஜசெக!

உடைந்தது பக்காத்தான்: கூட்டணியிலிருந்து வெளியேறியது ஜசெக!

921
0
SHARE
Ad

Pakatan-Logo-Featureகோலாலம்பூர், ஜூன் 16 – பக்காத்தான் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜசெக கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களுடனான உறவுகளை முறித்துக் கொள்கின்றோம் எனப் பாஸ் உலாமாக்கள் மன்றம் முடிவெடுத்துள்ளதை, ஜசெக மத்திய செயலவை ஏற்றுக்கொள்கிறது. அதன் காரணமாக நாங்கள் பக்காத்தானில் இருந்து வெளியேறுகின்றோம்.”

“மூன்று கட்சிகளை இணைந்து ஒரு பொதுவான கொள்கைகள் மூலம் பக்காத்தான் ராக்யாட் உருவானது. ஆனால் பாஸ் உலாமாக்கள் மன்றம் பக்காத்தானைக் கொன்றுவிட்டது. அதனால் பக்காத்தானை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த முடிவு நேற்று இரவு நடைபெற்ற ஜசெக மத்திய செயலவையில் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.