இதற்கிடையே அவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. கடந்த 2010–ஆம் ஆண்டு லலித்மோடி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் வெளியானதைத் தொடர்ந்து, அவர் இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்று விட்டார்.
இதைத் தொடர்ந்து லலித்மோடி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் போர்ச்சுக்கல்லில் உள்ள அவரது மனைவியைப் பார்த்து வர விசா கொடுக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவி செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே மத்திய அமலாக்கத்துறை லலித் மோடி மீதான பிடியை இறுக்கியுள்ளது. லலித் மோடி மீது 16 வழக்குகளை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது.
இந்த 16 வழக்குகளும் அந்நியச் செலவாணி மோசடி தொடர்புடையதாகும். இந்த 16 விதி மீறல்களுக்காக ரூ.1700 கோடி அபராதம் விதிக்க மத்திய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.