புதுடெல்லி, ஜூன் 18 – பொதுமக்களுடன் எப்போதும் நேரடித் தொடர்பில் இருக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது பெயரில் செல்பேசி செயலி (ஆப்ஸ்) அறிமுகம் செய்தார்.
சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றில் இணைந்து மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி, தகவல்களைத் தொடர்ந்து பதிவு செய்து கோடிக்கணக்கான இரசிகர்களைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், செல்பேசியில் பயன்படுத்தும் அனைத்து மக்களிடமும் தகவல்களைக் கொண்டு செல்லும் வகையில் ‘நரேந்திர மோடி செயலி (மொபைல் ஆப்) என்ற பிரத்யேகச் செயலியை நேற்று அறிமுகம் செய்துள்ளார்.
இந்தச் செயலி பதிவிறக்கம் செய்துகொண்டால், பிரதமரிடம் இருந்து தகவல்கள் மற்றும் இணைய செய்திகளை நேரடியாகப் பெற முடியும்.
இத்தகவலை டுவிட்டரில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘வாருங்கள், செல்பேசியில் இணைந்திருங்கள்’ எனப் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.