Home அவசியம் படிக்க வேண்டியவை டாக்டர் சுப்ராவிற்குப் பிரதமர் உட்பட முக்கியத் தலைவர்கள் வாழ்த்து!

டாக்டர் சுப்ராவிற்குப் பிரதமர் உட்பட முக்கியத் தலைவர்கள் வாழ்த்து!

494
0
SHARE
Ad

Subraகோலாலம்பூர், ஜூன் 18 – நேற்று அரசு ஊழியர்களுடனான பிரதமரின் சந்திப்புக் கூட்டத்தில் முக்கியமான அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில்தான் புனித ரமடான் மாதத்தை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு சிறப்புத் தொகையாக 500 ரிங்கிட் வழங்கப்படும் என பிரதமர் நஜிப் அறிவித்தார்.

அந்தக் கூட்டத்திற்கு வருகை தந்த சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்திற்குப் பிரதமர் நஜிப் துன் ரசாக், துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் உட்பட முக்கியத் தலைவர்கள், இடைக்காலத் தேசியத் தலைவராகத் தேர்வு பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

சங்கப் பதிவிலாகாவுக்கு எதிராக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தொடுத்திருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மஇகா மறுதேர்தலை எதிர்நோக்கியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், 2009 மத்தியச் செயலவையின் முடிவுப்படி, மத்திய செயலவை அனுமதியின்றி வழக்கு தொடுத்ததற்காகப் பழனிவேல் இனி மஇகா உறுப்பினர் தகுதியை இயல்பாகவே இழந்து விட்டார் என்றும் டாக்டர் சுப்ரா அறிவித்துள்ளார்.

இந்தத் திருப்பங்களைத் தொடர்ந்து இடைக்கால மஇகா தேசியத் தலைவராக டாக்டர் சுப்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பழனிவேல் கலந்து கொள்வாரா என்பதை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.