Home கலை உலகம் என்ன விளையாட்டு இது? நயன்தாரா மீது குடும்பத்தார் கோபம்!

என்ன விளையாட்டு இது? நயன்தாரா மீது குடும்பத்தார் கோபம்!

541
0
SHARE
Ad

121159533-nayanthara1சென்னை, ஜூன் 18- நயன்தாராவின் காதல் விளையாட்டுகள் உலகப் பிரசித்தம். ஏற்கனவே சிம்பு, பிரபுதேவா என்று காதலில் சிக்கிச் சின்னாபின்னப்பட்டு இப்போது தான் ஓரளவு  அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார் என்று நினைத்தால், மீண்டும் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் என்று கசமுசா கிளபியிருக்கிறது.

அதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, இருவரும் பின்னிப் பிணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

நயன்தாரா பின் விளைவுகளை யோசிக்காமல் கண்மூடித்தனமாக நடந்து கொள்கிறார்; மனம் போன போக்கில் போகிறார். என்னதான் நடிகையாக இருந்தாலும் ஒரு சுய ஒழுக்கம் வேண்டாமா? சமூகக் கட்டுப்பாடு வேண்டாமா? இப்படியா உணர்ச்சிவசப்பட்டவராக வாழ்வது?

#TamilSchoolmychoice

இவரது இத்தகைய நடவடிக்கையால் பெற்றோருக்கும் குடும்பத்தாருக்கும் அல்லவா தலைக்குனிவு?

விக்னேஷ் சிவனுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் பெற்றோருக்குக் கடுங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோரது உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தேனும், திருந்துவாரா நயன்தாரா?