Home உலகம் நோக்கியா தலைவரை வெளியேற்றியது மைக்ரோசாப்ட்!

நோக்கியா தலைவரை வெளியேற்றியது மைக்ரோசாப்ட்!

605
0
SHARE
Ad

Stephen-Elop-Nokiaகோலாலம்பூர், ஜூன் 18 – நோக்கியா நிறுவனத்தை வாங்கிய பிறகு மைக்ரோசாப்ட், தனது அடுத்தடுத்து வர்த்தக நடவடிக்கைகளைத் தொடர்ந்து வந்தது. அத்தகைய நடவடிக்கைகளில் மற்றுமொரு அறிவிப்பாக நோக்கியாவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஸ்டீபன் எலோப், மைக்ரோசாப்ட்டை விட்டு விலகுகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஸ்டீபன் எலோப்பின் இந்த விலகல் தொழில்நுட்ப வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினாலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொருத்தவரை எதிர்ப்பார்த்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. நோக்கியா செல்பேசிகளை முற்றிலும் மாற்றி விண்டோஸ் போன்களாக அறிவித்த மைக்ரோசாப்ட், அதன் வர்த்தக குறைபாடுகளால் தனது ‘கிளவுட்'(cloud)  மற்றும் மென்பொருள் உருவாக்கத்தில் அதிகக் கவனம் செலுத்த முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து தான் நோக்கியா நிர்வாகிகளின் வெளியேற்றம் ஆரம்பமாகி உள்ளது.

இது பற்றி தொழில்நுட்ப விமர்சகர்கள் கூறுகையில், “மைக்ரோசாப்ட் கடந்த வருடம் நோக்கியா செல்பேசிகள் வர்த்தகத்தில் சுமார் 7 .2 பில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்திருந்தது. நோக்கியாவை விண்டோஸ் போன்களாக மாற்றுவதன் மூலம் மிகப் பெரும் வர்த்தகத்தைப் பெற்று விடலாம் என்று அந்நிறுவனம் எண்ணி இருந்த நிலையில், சுமார் 3 சதவீத திறன்பேசிகளே விற்பனையானதால், நாதெல்லா நோக்கியா நிறுவனம் தொடர்பாக எடுத்த முடிவு பொய்த்துப் போனது. அதனைச் சரி செய்யும் நோக்கில் தான் நாதெல்லா, தற்போது சில முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

ஸ்டீபன் எலோப்பின் விலகல் பற்றி நாதெல்லா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது:-

“ஸ்டீபனும், நானும் இந்த முடிவு பற்றி முன்பே விவாதித்துள்ளோம். தற்போதைய நிலையில் ஸ்டீபன் ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.