Home இந்தியா 2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு: மத்திய மந்திரிசபை ஒப்புதல்!  

2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு: மத்திய மந்திரிசபை ஒப்புதல்!  

822
0
SHARE
Ad

modis-vision-about-smart-cities-projectபுதுடெல்லி, ஜூன் 18- 2022 ஆம் ஆண்டுக்குள் நகர்ப்புறங்களில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய மந்திரிசபைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அனைவருக்கும் வீடு  திட்டம் வரும் 25–ந் தேதி முறைப்படி தொடங்கி வைக்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்தத் திட்டம்  4 பிரிவாகச் செயல்படுத்தப்பட உள்ளது.

பிரிவு 1: குடிசைகள் மறு அபிவிருத்தித் திட்டம்.

இது தனியார்த் துறை பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். நிலம் வைத்திருக்கிறவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் சராசரியாக ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.

பிரிவு 2:  நகர்ப்புற ஏழை எளியோர் மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு வட்டி மானியம்.

நகர்ப்புற ஏழை எளியோர் மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினர் பயன்பெறும் வகையில் வட்டி மானியம் 6.50 சதவீதமாக உயர்த்தப்படும். இதன்மூலம் அவர்கள் தலா ரூ.1 லட்சம் முதல் ரூ.2.30 லட்சம் அளவுக்குப் பலன் அடைவார்கள்.

அதாவது- ரூ.6 லட்சம் வீட்டுக் கடன் வாங்கி, அதை 15 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்துகிறபோது, அதற்கு 10.50 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. தற்போது இதற்கான மாதத் தவணை ரூ.6,632 ஆகும். ஆனால் இனி இது ரூ.4,050 ஆகக் குறையும். இதன்மூலம் அவர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.2,582 பலன் அடைவார்கள்.

பிரிவு 3:  மலிவு விலை வீடுகள் திட்டம்.

தனியார்த்துறை, பொதுத்துறை பங்களிப்புடன் மலிவு விலை வீட்டு வசதித் திட்டம் நிறைவேற்றப்படும். இதற்காக ஒரு நபருக்கு ரூ.1.50 லட்சம் வீதம் உதவி வழங்கப்படும். இந்தத் திட்டம் நகர்ப்புற ஏழை மக்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரிவு 4: நகர்ப்புற ஏழை ஒருவர் தனிப்பட்ட முறையில் வீடு கட்டிக் கொள்வதற்கு அல்லது தற்போது இருக்கிற வீட்டினை மாற்றி அபிவிருத்தி செய்வதற்கு மத்திய அரசு ரூ.1.50 லட்சம் நிதி உதவி வழங்கும்.

நாட்டில் உள்ள 4,041 நகரங்களிலும், சிறிய நகரங்களிலும் இந்த நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம் நிறைவேற்றப்படும்.