கோலாலம்பூர், ஜூன் 18 – எம்டி ஆர்கிம் ஹார்மோனி கப்பலில் இருந்த 22 பணியாளர்களும் நலமுடன் இருப்பதாகவும், அதில் இருக்கும் கடத்தல்காரர்களை சரணடையுமாறு தாங்கள் வலியுறுத்தி வருவதாகவும் கப்பற்படைத் தலைமை அட்மிரல் டான்ஸ்ரீ அப்துல் அசிஸ் ஜாபர் கூறியுள்ளார்.
கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், கப்பல் பணியாளர்கள் யாரையும் ஒன்றும் செய்யமாட்டோம் என்று அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் அப்துல் அசிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கப்பலின் உள்ளே 8 கடத்தல்காரர்கள் இருக்கலாம் என்றும், இந்தோனேசிய மொழி பேசும் அவர்கள் கையில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் அசிஸ் தெரிவித்துள்ளார்.
MT Orkim Harmony என்று இருந்த கப்பலின் பெயரை மாற்றி kim Harmon என மாற்றியுள்ளனர். அதாவது கப்பல் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக சில எழுத்துக்களை அழித்துள்ளனர் எனப் புரிந்து கொள்ள முடிகின்றது.