Home கலை உலகம் மீண்டும் இணையும் ஷாரூக்கான் – காஜோல்: பாலிவுட் பரபரப்பு!

மீண்டும் இணையும் ஷாரூக்கான் – காஜோல்: பாலிவுட் பரபரப்பு!

752
0
SHARE
Ad

srk-kajol-readமும்பை, ஜூன் 18- பாலிவுட்டின் வெற்றிகரமான ஜோடிகளில் ஷாரூக்கான் – காஜோல் ஜோடியும் ஒன்று. தில்வாலே, கரண் அர்ஜூன், டூப்ளிகேட் உட்பட  15 படத்திற்கும் மேற்பட்ட படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். அத்தனை படங்களும் வசூலை வாரிக் குவித்தன; பெரும்பாலான படங்கள் வெள்ளி விழா கொண்டாடின.

இதற்கிடையில் திருமணமாகி, இல்லற வாழ்க்கையில் மும்முரமாக ஈடுபட்டு, நடிக்காமல் ஒதுங்கியிருந்த காஜோல், தன் நண்பர் ஷாரூக்கானின்  வேண்டுகோளுக்கு இணங்கி, மீண்டும் அவருக்கு ஜோடியாக நடிக்க மறுபிரவேசம் செய்துள்ளார்.

இவர்கள் மீண்டும் இணையும் படத்தின் பெயர் ‘திவாலே’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடக்கிறது.

#TamilSchoolmychoice

மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள இந்த இனிமையான தருணத்தை இருவரும், தங்களது  டிவிட்டர் பக்கத்தில் இரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்,