Home நாடு மலேசியக் கப்பலைக் கடத்திய 3 சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்!

மலேசியக் கப்பலைக் கடத்திய 3 சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்!

666
0
SHARE
Ad

????????????????கோலாலம்பூர், ஜூன் 25- மலேசியக் கப்பலைக் கடத்திய சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்ட 3 சூத்திரதாரிகளை மலேசியக் கடல்சார் அமலாக்க முகைமையகம் அடையாளம் கண்டுள்ளது. அம்மூவரின் குடியுரிமை, நடமாட்டம் குறித்த தகவல்களைச் சேகரித்து வருவதாகக் கடல்சார் அமலாக்க முகைமையகத்தின் துணை இயக்குநர் அகமட் புசி தெரிவித்தார்.

“முதற்கட்டமாக வியட்னாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 சந்தேக நபர்களும் நாடு கடத்தப்பட வேண்டும். அதன் பின்னர் விசாரணை நடவடிக்கைகள் வேகம் பெற வேண்டும். அப்போது தான் கடத்தலுக்குப் பின்னணியாகச் செயல்பட்ட சூத்திரதாரிகளும் தண்டிக்கப்படுவர்” என்று செய்தியாளர்களிடம் கூறினார் அகமட் புசி.

8 சந்தேக நபர்கள் பயன்படுத்திய கைபேசி மற்றும் செயற்கைக்கோள் தொலைபேசி குறித்த தகவல்களை அமலாக்க முகைமையகம் பெறும் என்று குறிப்பிட்ட அவர், உரிய தகவல்களைச் சேகரித்த பின்னர் 8 பேர் மீதும் குற்றம் சாட்டப்படும் என்றார்.

#TamilSchoolmychoice

“அனைத்துலகக் குற்ற ஒழிப்புக் காவல்துறை (இன்டர்போல்), அண்டை நாடுகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் உரிய தகவல்களை அளிப்பதன் வழி, இக்கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ள தனி நபர்களை அடையாளம் காண முடியும். இந்த விவகாரத்தைப் பொருத்தவரை உரிய கால அவகாசம் மற்றும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது” என்றார் அகமட் புசி.

6 ஆயிரம் டன் பெட்ரோலுடன் மலாக்காவில் இருந்து குவாந்தான் துறைமுகம் சென்ற மலேசியாவின் ஆர்கிம் ஹார்மோனி கப்பல் ஜூன் 11ஆம் தேதி இரவு 8.57 மணிக்கு மாயமானது. பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட இக்கப்பலைக் கடத்தியதாக வியட்னாமில் 8 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

“தற்போது விசாரணை நடவடிக்கையில் 50 விழுக்காடு பணி முடிந்துள்ளது. மீதமுள்ள விசாரணை நடவடிக்கைகளை முடிக்க சந்தேக நபர்கள் நாடு கடத்தப்பட வேண்டியுள்ளது.” என்றும் அகமட் புசி தெரிவித்தார்.