Home நாடு குடும்பத்தினரைச் சந்திக்கும் உற்சாகத்தில் ஆர்கின் ஹார்மோனிப் பணியாளர்கள்!

குடும்பத்தினரைச் சந்திக்கும் உற்சாகத்தில் ஆர்கின் ஹார்மோனிப் பணியாளர்கள்!

699
0
SHARE
Ad

crewshiphappyகோலாலம்பூர், ஜூன் 20 – கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட எம்டி ஆர்கின் ஹார்மோனிக் கப்பல் பணியாளர்களின் மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தும் முடிந்ததால் அவர்கள் தங்கள் குடும்பத்தினரைப் பார்க்க இருக்கும் உற்சாகத்தில் மிதக்கின்றனர்.

மீட்கப்பட்ட கப்பல் பணியாளர்களின்  உடல் நலனை உறுதி செய்ய அரசு மருத்துவ பரிசோதனைகளை ஏற்பாடு செய்திருந்தது. இன்று காலை நடைபெற்ற மருத்துவப் பரிசோதனைகளில் 21 பணியாளர்கள் எவ்வித பாதிப்புகளும் இன்றி உடல் நலத்துடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மற்றொரு பணியாளருக்கு மட்டும் குண்டுக் காயம்  உள்ளதால் அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். எனினும், அவருக்குப் பெரிய அளவிலான பாதிப்புகள் ஒன்றும் இல்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்துக் கப்பற்படையின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “பணியாளர்கள் மருத்துவப் பரிசோதனைகளை முடித்துக் கொண்டு தங்கள் குடும்பத்தினரைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு எவ்விதப் பாதிப்புகளும் ஏற்படவில்லை. பணியாளர்களை மீட்பதற்காக அரசும், கப்பற்படையும் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன. கப்பலைக் கடத்திய 8 கடற்கொள்ளையர்களும் வியட்நாம் அதிகாரிகளின் வசம் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தோ சு தீவு அருகே நேற்று காலை கடத்தல்காரர்கள் காவல் துறையினரால் பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.