Home கலை உலகம் புலி படத்தின் முதல் பார்வை வெளியானது!

புலி படத்தின் முதல் பார்வை வெளியானது!

748
0
SHARE
Ad

CH7C2J6VAAEuOwwசென்னை, ஜூன் 20 – நடிகர் விஜய்யின் நடிப்பில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள படமான ‘புலி’-யின் முதல் பார்வை இன்று பிரபல வார இதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது.

CH7DZjFUsAQ6Qcs‘இம்சை அரசன்’ சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ‘நான் ஈ’ சுதீப், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருக்கும் புலி படத்தின் முதல் பார்வை இன்று வெளியானது. வரும் 22-ம் தேதி விஜய், தனது 41-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக இந்த படத்தின் முன்னோட்டக் காட்சிகள் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அப்படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது.

CH7C19WUcAAWe3Pஒரு போராளியின் தோற்றத்தில் விஜய் மிடுக்காக தோற்றம் அளிப்பதால், இப்படம் பல்வேறு யூகங்களைக் கிளப்பி உள்ளது. அரசன், போராளி, ‘அப்பு’ கமல் போன்ற தோற்றம் என மூன்று வித்தியாசமான வேடங்களில் விஜய் நடித்திருக்கும் இப்படம் செப்டம்பர் 17-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.