Home அவசியம் படிக்க வேண்டியவை உலகத் தொழில்நுட்பங்களை நிர்ணயிக்கும் முக்கிய ஆளுமைகள்! (படத்தொகுப்பு 2)

உலகத் தொழில்நுட்பங்களை நிர்ணயிக்கும் முக்கிய ஆளுமைகள்! (படத்தொகுப்பு 2)

674
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 20 – உலக அளவில் தொழில்நுட்பப் பயன்பாடுகளும், சேவைகளும் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், அத்தகைய தொழில்நுட்பங்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர்களின் மதிப்பும் மேலும் மேலும் உயர்கிறது. அவர்கள் பண ரீதியாகவும், செல்வாக்கு ரீதியாகவும் பல்வேறு உயரங்களைத் தொடுகின்றனர். ஒருசிலர் பொது ஊடகங்களில் தங்களை இணைத்துக் கொள்வதால் பிரபலமாகிவிடுகின்றனர். பலர் பொது ஊடகங்களில் இருந்து விலகி இருப்பதால் அவர்கள் பற்றி வெளி உலகிற்குத் தெரியாமல் போய்விடுகிறது.

அத்தகையவர்களின் பட்டியலைப் போர்ப்ஸ் இதழ் சமீபத்தில் வெளியிட்டது. அந்தப் பட்டியலுக்கான படத்தொகுப்பு 2 கீழே காண்க:

ஹிரோஷி மிகிடாணி

#TamilSchoolmychoice

7ஜப்பானைச் சேர்ந்த ஹிரோஷி மிகிடாணி ஜப்பானின் மிகப்பெரும் இணைய வர்த்தக நிறுவனமாகக் கருதப்படும் ரகுடெனின் தலைவராக உள்ளார். இவரின் நிகரச் சொத்து மதிப்பு 9 பில்லியன் டாலர்கள் ஆகும்.

கோ பெங் ஓய்

8மலேசியாவின் முதல் கோடீஸ்வரரான கோ பெங், நாட்டில் நிதிச் சேவைகளில் முக்கியப் பங்கு வகிக்கும் மென்பொருள் நிறுவனமான சில்வர்லேக் ஆக்ஸிஸ்-ன் நிறுவனராவார். கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வரும் இவரின் நிகரச் சொத்து மதிப்பு 1.3 பில்லியன் டாலர்கள் ஆகும்.

யூஜின் காஸ்பர்ஸ்கை

9உலக அளவில் சைபர் குற்றங்களைத் தடுக்கும் முக்கிய சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுள் ஒன்றான காஸ்பர்ஸ்கையின் நிறுவனர் யூஜின் காஸ்பர்ஸ்கை ஆவார். இவரின் சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலர்கள் ஆகும்.

ஜேசன் சாங்

10உலக அளவில் மிகப் பெரும் குறை கடத்திகள் தயாரிக்கும் நிறுவனமான ‘ஏஎஸ்இ’ (ASE) சிங்கப்பூரில் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர் தான் ஜேசன் சாங். இவரின் நிகரச் சொத்து மதிப்பு 3 பில்லியன் டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

‘பிரைன்’ கிம் போம்-சு

11கொரிய பங்குச் சந்தையில் 9.5 பில்லியன் டாலர்களாகக் கணக்கிடப்பட்ட குறுஞ்செய்திச் சேவை நிறுவனமான ‘காகோ டாக்’ (KakaoTalk) கடந்த 2014-ம் ஆண்டு அந்நாட்டில் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தியது. அந்தச் செயலியை உருவாக்கியவர் தான் கிம் போம்-சு. அவரின் நிகரச் சொத்து மதிப்பு 2.3 பில்லியன் டாலர்கள் ஆகும்.

டெர்ரி கோ

12தைவான் நாட்டைச் சேர்ந்த டெர்ரி கோ தான் பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவராவார். ஆப்பிளின் ஐபோன்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் பாக்ஸ்கான் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டெர்ரி கோவின் நிகரச் சொத்து மதிப்பு 6.7 பில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகிறது.

மைக்கேல் லிஞ்ச்

13பிரிட்டனின் முக்கிய முதலீட்டு நிறுவனமான இன்வோக் கேப்பிடல் நிறுவனத்தின் தலைவரான மைக்கேல் லிஞ்ச், தனது அடோனமி நிறுவனத்தை எச்பி நிறுவனத்திற்கு விற்பனை செய்ததன் மூலம் பிரிட்டன் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தன்னை இணைத்துக் கொண்டார். இவரின் நிகரச் சொத்து மதிப்பு 1.01 பில்லியன் டாலர்கள் ஆகும்.

போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் வழக்கம் போல் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.