Home Featured நாடு எண்ணெய்க் கப்பல் கடத்தல்: பின்புலமாகச் செயல்பட்ட சந்தேக நபர் கைது!

எண்ணெய்க் கப்பல் கடத்தல்: பின்புலமாகச் செயல்பட்ட சந்தேக நபர் கைது!

794
0
SHARE
Ad

Orkimகோலாலம்பூர் – மலேசிய எண்ணெய்க் கப்பல் எம்டி ஆர்கிம் ஹார்மனி கடத்தப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் நபரை இந்தோனேசிய கடற்படை கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேற்கு ஜகார்த்தாவிலுள்ள குடியிருப்புப் பகுதியில் அந்த சந்தேக நபர் பிடிபட்டார் என்று கடற்படை சார்பில் கூறப்பட்டுள்ளதாக ‘த ஜகார்த்தா போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது வடக்கு ஜகார்த்தாவிலுள்ள கெலாப்பா காடிங் என்ற இடத்தில் கடற்படை இராணுவ முகாமில் அந்த சந்தேக நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice